• எங்கள் சேவைகள்

    broken image

    உடல் எடையை நிர்வகித்தல்

    உடல் எடையைக் குறைப்பது, சரியான உடல் எடையைத் தக்க வைத்துக் கொள்வது, உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்பது போன்ற விஷயங்கள் ஒருவருக்கு நீண்ட கால போராட்டமாக இருக்க கூடும். உங்கள் உடல் நலனுக்காக மட்டுமின்றி, உங்கள் மன நலனுக்காகவும், உங்களின் சிறந்த தோற்றத்தை உணர்வதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆதலால், சான்றுகள் அடிப்படையிலான உத்திகள் மற்றும் அனுபவத்தின் மூலம், உணவுடன் சிறந்த தொடர்பை வழிவகுக்கும் ஆரோக்கியம் மற்றும் பயனுள்ள எடை மேலாண்மை கருவிகளைக் கண்டறிய நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

    broken image

    இரண்டாவது வகை நீரிழிவு நோய்

    இன்சுலின் எதிர்ப்பு, ஒப்பீட்டளவில் இன்சுலின் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக நம் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகப்படுத்தும், ஒரு வளர்சிதைமாற்ற நோயாக இரண்டாவது வகை நீரிழிவு நோய் திகழ்கிறது. இருப்பினும், இரண்டாவது வகை நீரிழிவு நோயுடன் ஒருவர் நன்றாக வாழ முடியும். இதற்கு, ஆரோக்கியமான உணவு, சீரான உடற்பயிற்சி அல்லது மருந்துகளைப் பயன்படுத்துவதன் வழி உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்து நிர்வகிக்க வேண்டும். உங்கள் இரண்டாவது வகை நீரிழிவு நோயை இன்றே கட்டுப்படுத்துங்கள். இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் எடை மேலாண்மை துறையில் நிபுணத்துவம் பெற்ற எங்களின் நிபுணர்கள் உங்களுக்குச் சரியான உணவு முறையைத் தேர்வு செய்யவும், சர்க்கரை உயர்த்தல் குறியீட்டை (glycaemic control) மேம்படுத்தவும் மற்றும் உங்களின் முழு ஆரோக்கியத்தைச் சீரமைக்கவும் உதவி புரிவார்கள்.

    broken image

     

    உயர் இரத்த அழுத்தம்

    உயர் இரத்த அழுத்தம் ஒருவருக்கு நெஞ்சு வலி, தலைச்சுற்றல், குமட்டல், பதற்ற உணர்வு, மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்திற்குச் சரியான சிகிச்சை பெறாவிட்டால், எதிர்காலத்தில் அது மிகவும் கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே, உயர் இரத்த அழுத்தத்தைத் திறம்பட நிர்வகிக்க உங்களுக்கு உதவும் வகையில் தனிப்பட்ட அணுகுமுறையை நாங்கள் வழங்குகிறோம். எங்களின் ஊட்டச்சத்து திட்டங்கள் சீரான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் குறைந்த சோடியம் மற்றும் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவு வகைகளில் கவனம் செலுத்துகின்றன. உங்கள் இரத்த அழுத்த அளவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இருதய நலனை மேம்படுத்துவதின் வழிகளை எங்களின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

    broken image

    உயர் கொழுப்பு

    அதிக கொழுப்பு அல்லது உயர் ட்ரைகிளிசரைடுகளுக்கு (triglycerides) எப்போதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாவித்தாலும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். எங்கள் நிபுணர்களின் ஆலோசனைக்கேற்ப உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள். எனவே, எங்களிடம் தனிப்பட்ட அணுகுமுறைகளைக் கையாண்டு நீங்கள் சீரான வாழ்க்கை முறை மாற்றங்களையும் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவு வகைகளையும் கண்டறிந்து உட்கொள்ளலாம். இதன்வழி, நீங்கள் அதிக கொழுப்பு அல்லது உயர் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும். இருதய அபாயங்களைக் குறைப்பதற்கும், நீண்டகால இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நாம் ஒன்றாக பங்காற்றுவோம்.